எங்கள் கல்வி முறையில் ஏதோ தவறு இருக்கிறது. ஆனால் அது என்ன?

 

எங்கள் குழந்தைகளை உண்மையான / நடைமுறை உலகத்திற்கு தயார்படுத்துவதற்காக நாங்கள் பள்ளிக்கு அனுப்புகிறோம்.

இந்த உலகம் மிக மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஆனால் எங்கள் பள்ளிகள் பல நூறு ஆண்டுகளாகப் பெரிதாக மாறவில்லை. 

 

உண்மையில், தற்போதைய கல்வி முறை தொழில்துறை யுகத்தில் குறிப்பாக தொழிற்சாலை தொழிலாளர்களின் உழைப்பை கடைந்தெடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது என்பதை உலகெங்கிலும் உள்ள சிந்தனையாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். 

 

வெகுஜன உற்பத்தி மற்றும் வெகுஜனக் கட்டுப்பாடுகளைக் கொண்ட இந்த தொழில்துறை யுகத்தினுடைய மனநிலை இன்னும் பள்ளிகளில் ஆழமாக இயங்குகிறது. 

 

தொழில்துறை யுகத்தின் மதிப்பீடுகள் 

 

நாங்கள் குழந்தைகளை வகைப்படுத்துவதன் மூலம் கல்வி கற்பிக்கிறோம்.

மற்றும் மணிகளை ஒலிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை அடக்கி ஆளுகிறோம். நாள் முழுவதும் மாணவர்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. இரு / உட்காரு,  உங்கள் புத்தகங்களை வெளியே எடு, 40ஆம் பக்கத்துக்கு திருப்பு, 3வது கணக்கைத் தீர், கதைப்பதை நிறுத்து.

 

பள்ளியில், உங்களுக்கு சொல்லப்படுகிறதை நீங்ள் சரியாகச் செய்வதற்காகவே உங்களுக்கு வெகுமதி வழங்கப்படுகிறது. இவைகள் தொழில்துறை யுகத்தின் மதிப்பீடாக இருக்கிறது. அதுவே தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. மற்றும் அவர்களுக்கு என்ன சொல்லப்பட்டதோ அதை சரியாகச் செய்கிறார்கள்.

 

ஆனால் இன்றைய உலகில், அறிவுறுத்தல்களை வெறுமனே பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும்?

 

இந்த நவீன உலகம் ஆக்கப்பூர்வமாக இருக்கக்கூடியவர்களையும் தங்களின் கருத்துக்களை பரிமாறக்கூடியவர்களையும் மற்றும் மற்றவர்களுடன் ஒத்துழைக்கக்கூடிய நபர்களையும் மதிக்கிறது.

 

ஆனால் தொழில்துறை யுகத்தின் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டமைப்பில் இத்தகைய திறன்களை வளர்க்க எங்கள் குழந்தைகளுக்கு வாய்ப்புக் கிடைக்காது.

 

சுயாதீனப் பற்றாக்குறைசயும் / இல்லாமையும் மற்றும் கட்டுப்பாடும். 

 

பள்ளிகளில் எங்கள் குழந்தைகள் முழுமையான சுயாதீனம் இன்மைக்கும் கட்டுப்பாட்டுக்கும் முகம் கொடுக்கிறார்கள். ஒரு குழந்தையின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் இந்த கட்டமைப்பால் இறுக்கமாக கட்டுப்படுத்தப்படுகிறது. 

 

ஆனால் இன்றைய நவீன உலகில், நீங்கள் முக்கியமான வேலையைச் செய்கிறீர்கள் என்றால், உங்கள் சொந்த நேரத்தை நீங்களே நிர்வகிக்கிறீர்கள். என்ன செய்ய வேண்டும் ? அதை எப்போது  செய்ய வேண்டும் என்பது தொடர்பாக உங்கள் சொந்த முடிவுகளை நீங்களே முடிவெடுக்கின்றீர்கள்.

 

ஆனால் பள்ளியில் வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.

 

உங்கள் சொந்த வாழ்க்கைக்கு நீங்களே பொறுப்பில்லை என்று ஒரு ஆபத்தான செய்தியை இந்த கட்டமைப்பு நம் குழந்தைகளுக்குத் திணிக்கிறது. அவர்கள் வாழ்க்கையை அவர்களே சுயமாக பொறுப்பெடுப்பதற்கும், தங்கள் வாழ்க்கையில் பெரும்பாலானதை தாங்களே செய்து முடித்து வாழ்க்கையை சிறப்பாக பயனுள்ளதாக உருவாக்குவதற்கும் பதிலாக அவர்களுக்கு விதிக்கப்படுகிற கட்டளைகள் எதுவாக இருந்தாலும் வெறுமனே பின்பற்ற வேண்டியிருக்கிறது.

 

பிள்ளைகளுக்கு சுயாதீனம் நம்பமுடியாத அளவிற்கு மிக முக்கியமானது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். எங்கள் குழந்தைகள் பள்ளியால் சலிப்படைவதில் மற்றும் ஊக்கமற்றவர்களாக இருப்பதில் ஆச்சாரியமொன்றுமில்லை. 

 

நீங்கள் சரியாக என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்குமானால் நீங்கள் எப்படி உணர்வீர்கள் எண்று நினைத்துப் பாருங்கள்.

 

நம்பிக்கையற்ற கல்வி

 

இன்று பாடசாலைகளில் கற்பிக்கப்படும் கல்வி உண்மையானதல்ல. ஏனென்றால் அது மனப்பாடம் செய்வதாகவும், சொற்பொழிவுகளாகவும் இருக்கிறது. 

 

இந்த கல்வி அமைப்பு வடிவம் எல்லாப் பிள்ளைகளும் ஒரேமாதிரியான பொதுவான அறிவைக் கட்டாயமாக பெற்றுக்கொள்வதையே தீர்மானிக்கிறது. புகட்டப்பட்ட இந்த அறிவு எவ்வளவு தூரம் தக்க வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு மாதமும் பரீட்சை வைக்கின்றோம். எங்களுக்குத் தெரியும் இப்படியான கற்றல் முறை உண்மையானதில்லை என்று. எனென்றால் பரீட்சைக்கு அடுத்தநாள் இவையெல்லாம் மறந்து போய்விடும்.

 

கல்வி கற்றல் மிகவும் ஆழமாகவும், நிலையானதாகவும் நம்பகமாகவும் இருக்க வேண்டும். இது வெறும் மனப்பாடம் பண்ணுவதையும், தக்க வைப்பதையும் விட மேன்மையானது. ஆனால் நாங்கள் பரீட்சைக்கும், பெறுபேறுகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றோம். மதிப்பெண்களை மட்டுமே நாம் மதிக்கிறோம். இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் ஆரோக்கியமற்ற கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது. 

 

பிள்ளைகள் மேலதிக வகுப்புகளுக்கு முடிவில்லாத அளவுநேரங்களை செலவழிகின்றார்கள். மிக விரைவில் மறந்து விடக்கூடிய பயனற்ற தகவல்களை தங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதற்காக இரவு முழுவதும் கண்விழித்துப் படிக்கிறார்கள்.

உணர்வுகளுக்கும், ஆர்வங்களுக்கும் இடமில்லை.

 

எங்களது கல்வி அமைப்பு மிகவும் வரையறுக்கப்பட்ட கட்டமைப்பு, இங்க  எல்லாப் பிள்ளைகளுமே கட்டாயமாக ஒரே விசயத்தை, ஒரே மாதிரி, ஒரே நேரத்தில் ஒரே முறையில் கற்றுக் கொள்ளவேண்டும். 

 

நாங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், நம்முடைய சொந்த பாதையில் ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள் என்ற அடிப்படை மனித உண்மையை இந்த கல்வி அமைப்பு மதிக்கவில்லை. 

 

எங்கள் எல்லாருக்குமே வெவ்வேறான உணர்வுகள், விருப்பங்கள், இருக்கின்றன. வாழ்க்கையில் வெற்றி காண்பதற்கான திறவுகோல் என்பது எங்கள் விருப்பங்களை நாங்கள் கண்டறிவதாகும்.

 

ஆனால் இன்றைய பாடசாலைகள் எங்கள் குழந்தைகளின் ஆர்வங்களை கண்டறிந்து அவற்றை செழுமைப்படுத்துகின்றனவா?

 

எங்கள் குழந்தைகளின் வாழ்கைக்கு தேவையான மிக முக்கிய கேள்விகளுக்கு இன்றைய பாடசாலை கல்வி முறையில் இடமில்லை.

 

எங்களுக்கு எதில் கெட்டித்தனம் இருக்கிறது?

 

எனது வாழ்க்கையில் நான் என்ன செய்ய விரும்புகிறேன்?

 

இந்த உலகத்தோடு நான் எப்படி சேர்ந்துகொள்வேன்?

 

இந்த கல்வி அமைப்பு இவை பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

 

பிரபலமான பல திறமையானவர்கள் இந்த பாரம்பரிய பள்ளிக் கல்விமுறையால் தோல்வியடைந்தவர்களே. அதிஷ்டவசமாக இந்த தோல்விகளிலிருந்து அவர்களால் வெற்றி காண முடிந்தது. ஆனால் இது எல்லோராலும் முடிவதில்லை.

 

தற்போதயை கல்விக் கட்டமைப்பில் எவ்வளவு திறமைகள், வளங்கள் அடையாளம் காணப்படாமலேயே போகின்றன் என்பதற்கு எங்களிடம் எந்த அளவீடுகளும் இல்லை.

 

எவ்வாறு நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்பதில் உள்ள வேறுபாடுகள். OR (எப்பிடி நாங்கள் படிக்கிறோம் என்பதிலுள்ள வேறுபாடுகள்.)

 

ஒரு விடயத்தைக் கற்றுக்கொள்ள எவ்வளவு நேரத்தை செலவிழிக்கின்றோம், நாம் எவ்வாறு கற்றுக்கொள்கிறோம் /  படிக்கின்றோம் மற்றும் என்ன உபகரணங்கள், வளங்கள் எங்களுக்கு  சிறப்பாக பயன்படுகின்றன என்பதிலும் நாம் ஒவ்வொருவரும் வேறுபடுகின்றோம். ஆனால் இந்த கல்வி கட்டமைப்பில் இத்தகைய வேறுபாடுகளுக்கு இடமில்லை.

 

எனவே, நீங்கள் ஏதாவது ஒரு விடயத்தைக் கற்றுக்கொள்வதில் சற்று மெதுவாக இருந்தால், இந்த இடத்தில் நீங்கள் தோல்வியுற்றவராகக் கருதப்படுகிறீர்கள், இங்க உங்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் கற்றுக்கொள்வதற்கு இன்னும் சிறிது நேரம்.

 

விரிவுரை

 

தற்போதைய கல்வித் திட்டத்தில் குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு ஐந்து  மனித்தியாலங்களுக்கு மேல் விரிவுரை செய்யப்படுகிறது.

 

ஆனால் விரிவுரைகளில் பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன.

 

30 பிள்ளைகளை கையால் வாயைப் பொத்தியபடி, மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியாதபடி வைத்திருப்பது அடிப்படையில் மனித நேயமற்ற செயல் என்று Khan Academyயைச் சேர்ந்த Sal Khan குறிப்பிடுகிறார்.

 

மற்றும் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் வெவ்வேறு மாணவர்களின் புரிதல்கள் வேறுவேறானதாகவே இருக்கிறது.

 

இப்போது ஆசிரியர் என்ன படிப்பித்தாலும், முன்னேறிய மாணவருக்கு அது அலுப்படிப்பதாக இருக்கின்ற அதேவேளை பின் தங்கியுள்ள மாணவருக்கு குழப்பமாக இருக்கலாம்.

 

ஏனென்றால் தற்போது இணையம் வழியாகவும் டிஜிட்டல் ஊடகங்கள் வழியாகவும் உலகத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் நம் குழந்தைகள் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள்.

 

யாரும் எதையும் கற்றுக் கொள்வதை தொழில்நுட்பம் சாத்தியமாக்கியிருந்தாலும், தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் கல்வி அமைப்பு இந்த வியக்கத்தக்க தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்துவதில்லை.

 

தொழிற்சாலைகள் காலத்தில் உருவாக்கப்பட்ட எமது கல்வி கட்டமைப்பு முறை இப்போது காலாவதியாகி, பயனற்றுப் போய்விட்டது.

 

நவீன உலகத்திற்காக நமது குழந்தைகளை தயார்படுத்த நாங்கள் விரும்பினால், கற்றல் செயல்த்திறநுடன் மற்றும் ஈடுபாட்டுடன் இருக்க நாங்கள் விரும்பினால், நமது கல்வி கட்டமைப்பு முறையை நாம் அடிப்படையில் மாற்ற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

https://www.youtube.com/watch?v=okpg-lVWLbE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment